கிலோ ரூ.5: தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
காய்கறிகளில் தக்காளியின் விலை மட்டும் வித்தியாசமாக இருக்கும். ஒருசில நேரங்களில் கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகும் தக்காளி பின் திடீரென ‘ரூ.5க்கும் குறைவாக விற்பனை செய்யப்படும்
இந்த நிலையில் தக்காளி பழங்கள் அதிக அளவில் காய்த்து அதன் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தக்காளி பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை சந்தைகளுக்கு வரும் தக்காளி பழங்கள் ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.