கில்லி, வாலி: இந்த 2 படங்களும் எந்த பிரபலத்திற்கு பிடித்தது தெரியுமா?
அஜித்தின் ‘வாலி’ மற்றும் விஜய்யின் ‘கில்லி’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆன படங்கள் என்பதும் இந்த இரு படங்களும் அஜித், விஜய் இருவருடைய திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படங்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே
இந்த நிலையில் இந்த இரு படங்களையும் தனக்கு பிடித்த தமிழ்ப் படங்கள் என்று பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும் ‘3 இடியட்’ தனக்கு பிடித்த இந்தி படம் என்றும், தனக்கு பிடித்த பாடல் மாரி 2′ படத்தில் இடம்பெற்ற ‘ரெளடி பேபி’ பாடல் என்றும் தனக்கு பிடித்த பஞ்ச் டயலாக் ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிவுட்டில் தனக்கு பிடித்த நடிகர் அமீர்கான் என்றும், தெலுங்கில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா என்றும், அஸ்வின் கூறியுள்ளார்.