கீர்த்தி சுரேஷின் கணவர் இந்த நடிகரை போல் இருக்க வேண்டுமாம்!
நடிகையர் திலகம், சாமி 2, சர்கார் ஆகிய படங்களில் நடித்த நடிகை கீர்த்திசுரேஷ் தனக்கு விஜய் அல்லது விக்ரம் போன்ற கணவர்தான் வேண்டும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ், சரோஜாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் புரமோவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் புகைப்படங்களை கீர்த்திசுரேஷிடம் காட்டி இவர்களில் உங்கள் கணவர் யார் மாதிரி இருக்க வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த கீர்த்திசுரேஷ், ‘தளபதி விஜய், விக்ரம் போன்ற கணவர் எனக்கு வேண்டும் என்று பதில் கூறினார்.