குக்கரும் கிடையாது, பொதுச்சின்னமும் கிடையாது: தினகரன் அப்செட்
டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? என்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியாகவிருந்த நிலையில் சற்றுமுன் இதுகுறித்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதன்படி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அமமுக அனைவருக்கும் பொதுசின்னம் தர தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது
இருப்பினும் ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல்வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்றும், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பொதுசின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பிடிவாதத்தால் தினகரன் அப்செட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.