குக்கர் சின்னமே இல்லை, 500 குக்கர் எப்படி வந்தது? தேர்தல் ஆணையம் குழப்பம்
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் இல்லை என்ற தீர்ப்பு வெளிவந்துவிட்டது என்பது தெரிந்ததே. அதே போல் பல சுயேட்சை வேட்பாளர்கள் இந்த சின்னத்தை கேட்டு வருவதால் இந்த சின்னத்தை எந்த வேட்பாளர்களுக்கும் தரக்கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சென்னையிலிருந்து மதுரை ஜாகிங்கிட் நகர் பகுதிக்கு வந்த லாரியில் முறையான ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான 500 எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்களை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
குக்கர் சின்னம் யாருக்குமே கொடுக்காத நிலையில் இந்த குக்கர்கள் எதற்காக வந்துள்ளன என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
x