குஜராத் தேர்தல் முடிவுக்காக சீனா காத்திருப்பது ஏன்?

குஜராத் தேர்தல் முடிவுக்காக சீனா காத்திருப்பது ஏன்?

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் வரும் 18ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே குஜராத்தில் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரிந்துவிடும்

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி பரபரப்பான கருத்து ஒன்றை கூறினார். இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, குஜராத் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

குஜராத் தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதை வெளிக்காட்டும் ஒரு கருவியாக அமையும் என்றும், இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றி கிடைத்தால், மத்திய அரசு மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே, இந்தத் தேர்தல் முடிவை சீனாவும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் எடுக்கப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் சீனாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சீன நிறுவனங்களான ஜியோமி, ஓப்போ போன்றவை இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக சீனா அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளதாவது:- “குஜராத்தில் பா.ஜ.க அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், இந்திய அரசு தொடர்ந்து சில பொருளாதார நடவடிக்கைகளை துணிந்து எடுக்கக்கூடும். அதேநேரத்தில், தோல்வியோ அல்லது வெற்றி கிடைத்தும் வாக்கு சதவிகிதம் குறைந்தாலோ அவற்றை எதிர்பார்க்க முடியாது என கூறி உள்ளது.

Leave a Reply