குஜராத் பட்டேல் சிலையால் கிடைத்த வருமானம் எவ்வளவு?

குஜராத் பட்டேல் சிலையால் கிடைத்த வருமானம் எவ்வளவு?

குஜராத் மாநிலத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சிலை எழுப்பப்பட்டது. உலகின் மிக உயரமான சிலையை வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரது சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். ஒற்றுமை சிலை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலையை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்து வருகின்றானர்.

இந்த நிலையில் குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ஜனவரி 27 வரை ரூ.18.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஓராண்டுக்கு தோராயமாக ரூ.50 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தகவல் தெரிவித்தார்.

இதே ரீதியில் என்றால் அடுத்த ஐந்து வருடத்தில் இந்த சிலை நிறுவ செய்யப்பட்ட தொகையான ரூ.3000 கோடி அரசுக்கு கிடைத்துவிடும் என்று தெரிகிறது

 

Leave a Reply