குஜராத் முதல்வர் ஆகிறாரா ஸ்மிரிதி இரானி?

குஜராத் முதல்வர் ஆகிறாரா ஸ்மிரிதி இரானி?

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆறாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள பாஜக, தற்போது புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மீது அதிருப்தி அதிகம் இருப்பதாலும், வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலிமையான முதல்வர் தேவை என்பதாலும் புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

குஜராத் புதிய முதல்வர் பட்டியலில் சுமார் பேர் இருந்தாலும் முன்னணியில் இருப்பவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி என்ற தகவல் வெளிவந்துள்ளது. இவர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர் என்பதாலும், ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்ட துணிச்சல் மிகுந்தவர் என்பதாலும் இவர் குஜராத் முதல்வராக தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply