குடல்புற்று நோய் வராமல் இருக்க தினமும் சாம்பார் சாப்பிட வேண்டுமாம்!
நமது விருந்துச் சாப்பாட்டின் தனித்துவமான அம்சம் கமகமக்கும் சாம்பார். சாதாரணச் சாப்பாட்டிலும்கூட வாரத்தின் இரண்டு மூன்று நாட்களாவது சாம்பார் இடம்பெற்றுவிடுகிறது. சாப்பாட்டுடன் சாம்பாரைக் கலந்து சாப்பிடுபவர்கள் ஒரு ரகம் என்றால், சாம்பாரை சர்பத் போலக் குடிப்பவர்கள் இன்னொரு ரகம்.
அதைப் பார்த்து யாராவது இனி உங்களை ‘சரியான ‘சாம்பார்’ கணேசனாக இருப்பே போலிருக்கே’ என்று சொன்னால், சந்தோஷமாகச் சிரியுங்கள். ஏன் தெரியுமா, அவர்களைக் காட்டிலும் குடல் புற்றுநோய் உண்டாவதற்கான சாத்தியம் உங்களுக்கு மிகவும் குறைவு.
ஆம், தினமும் சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.