குடிநீர் பிரச்சினைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடும் அமைச்சர் எஸ்பி வேலுமணி
தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் கடந்த சில வாரங்களாக குடிநீர் பிரச்சனை பெரும் அளவில் இருந்து வரும் நிலையில் இதுகுறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது
இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் அமைச்சர் எஸ்பி வேலுமணி, மாநகராட்சி அதிகாரிகளுடன் தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் பிரச்சினைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்
சென்னை மக்களுக்கு தடங்கல் இன்றி குடிநீர் கிடைக்க இந்த ஆலோசனையில் தீர்வு எட்டப்படும் என கருதப்ப்டுகிறது.