குடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஐந்து யானைகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஐந்து யானைகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் ஐந்து காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி சிலசமயம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் வருவதுண்டு. அந்த வகையில் நேற்று நள்ளிரவு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஐந்து யானைகள் வந்துள்ளது

முதலில் ஒரு யானை வேகமாக ஓடி வருவது போன்றும், அதனை தொடர்ந்து நான்கு யானைகள் வருவதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த யானைகளை பார்த்து நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் பயந்து ஓடுவதும் இந்த சிசிடிவி காட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply