குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்: அதிர்ச்சி தகவல்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேருக்கு, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் மூண்ட கலவரத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் போராட்டம் நடந்த ராம்பூர், சம்பால் , பிஜ்நோர் , கோரக்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொது சொத்துக்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாக தெரிகிறது
இந்த நிலையில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியாக போராட்டக்காரர்கள் 130 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள், மொத்தம் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.