குடியுரிமை சட்டம் நிறைவேறியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய பாகிஸ்தான் அகதிகள்
கடந்த திங்களன்று மக்களவையிலும் நேற்று மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இதனையடுத்து பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த அகதிகளில் முஸ்லீம்கள் தவிர மற்ற மதத்தினர்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்கும்
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வாழும் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது பலவருட காத்திருப்புக்கு பலன் கிடைத்துவிட்டதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்நாள் தங்களுக்கு மற்றொரு தீபாவளி தினம் என்றும் இனிமேல் நாங்கள் இந்தியர்கள் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தஙகள் மகிழ்ச்சியினை பரிமாறி கொள்ளும் வகையில் இனிப்புகளை பரிமாறியும் பட்டாசுகளை வெடித்தும் அவர்கள் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது