குட்கா விவகாரம்: மாதவராவ் உள்பட 6 பேர்களை கைது செய்த சிபிஐ

குட்கா விவகாரம்: மாதவராவ் உள்பட 6 பேர்களை கைது செய்த சிபிஐ

குட்கா ஊழல் வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவ் என்பவரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. இந்த வழக்கில் அவரையும் சேர்த்து மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது..

குட்கா விவகாரம் குறித்து நேற்று முதல் அமைச்சர், அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை செய்து வரும் நிலையில் இந்த கைது நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா விவகாரத்தில் இடைத்தரர்களாக செயல்பட்டதாக ராஜேஸ், நந்தகுமார் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர் கிடங்கு உரிமையாளர் மாதவ ராவையும் கைது செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன். கிடங்கு உரிமையாளர்கள் மாதவராஜ், உமாசங்கர் குப்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.

Leave a Reply