குமரியில் அரசு பேருந்துகள் கல்வீசி தாக்குதல்: விவசாயிகள் போராட்டத்தில் பதட்டம்

குமரியில் அரசு பேருந்துகள் கல்வீசி தாக்குதல்: விவசாயிகள் போராட்டத்தில் பதட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக அம்மாவட்டத்தின் மீனவர்கள் பலர் காணாமல் போய் அவர்களில் பலர் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி, சலுகைகள் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் ஓகி புயலால் மீனவர்கள் போன்று தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த போராட்டத்தில் ஒருசில இடங்களில் வன்முறை வெடித்ததால் 21 அரசுப்பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில், திருவட்டாறு, மார்த்தாண்டம், குலசேகரம் பரந்தால்மேடு உள்ளிட்ட இடங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருசில இடங்களில் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply