குமரி அருகே ஓகி புயல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கன்னியாகுமரி கடல் அருகே ஏற்பட்ட காற்றழ்த்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதை அடுத்து அதற்கு ‘ஓகி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே 170 கி.மீ தொலைவில் உருவாகி உள்ள இந்த புயல் குமரி கடலோரம் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து திருவனந்தபுரம் கடலோர பகுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ”ஓகி” புயல் கரையை கடக்க வாய்ப்பில்லை என்றும் இருப்பினும் குமரி கடலோர பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வரை காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச்செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது