குமரி கடற்கரை கடைகள் அகற்றம் குறித்த வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குமரி கடற்கரை கடைகள் அகற்றம் குறித்த வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்தியாவின் தென்கோடி மற்றும் சுற்றுலா நகரமான கன்னியாகுமரி கடற்கரையில் முளைத்துள்ள கடைகளால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக தொந்தரவாக இருப்பதாக வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் கடைகள் அனைத்தையும் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த்து.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யபப்ட்டது.

குமரி கடற்கரை பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவாக இருப்பதனால் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தால், இந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர். மேலும் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து உரிய அதிகாரிகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply