குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்பது எப்போது?

குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்பது எப்போது?

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பாஜகவின் எடியூரப்பா நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா செய்துவிட்ட நிலையில் மஜத கட்சியின் குமாரசாமிக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் வரும் புதன்கிழமை அவர் பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

நாளை மே 21ஆம் தேதி ராஜீவ்காந்தி நினைவுதினம் என்பதால் அவர் நாளை முதல்வராக பதவியேற்கவில்லை என்றும், அதனால் வரும் புதன்ழமையன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் மஜத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து குமாரசாமி கூறியதாவது: கர்நாடக முதல்வராக வரும் புதன்கிழமை (23.5.2018) மதியம் 12 முதல் 1 மணிக்குள் நான் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளேன். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஆகியோர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைத்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க இருக்கிறேன். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நானே நேரில் சென்று அழைப்பு விடுக்க இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply