குரலை வைத்து உருவத்தை கணிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!
மனிதர்களின் குரலை வைத்தே அவர்களுடைய முகத்தை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு என்ற புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் ஆர்டிபிசியல் நியூரல் நெட்வொர்க் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குரலை வைத்து உருவத்தை கணிக்கும் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் யூடியூப் கிளிப்களில் இருந்து எடுக்கப்பட்ட சில நிமிட குரல் பதிவை மட்டுமே கொண்டு அவர்களின் முக அமைப்பை ஓரளவு வடிவமைக்கமுடியும் என்றும், தொலைபேசியில் சில நிமிட குரல் பதிவைக் கொண்டும் அவர்களின் உருவத்தை வடிவமைக்கக் கூடும் என்றும் இந்த ஆய்வு நிறுவனம்கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி குரலில் இருந்து பேசுபவர்களின் வயது, அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவருடைய பாலினம் என்ன? என்பதையும் இந்த தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்க முடியும் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஆசியாவைச் சேர்ந்த அமெரிக்கர் சீன மொழி பேசினால் அவர் ஆசியர் என தவறாக கணிக்கும் அந்த தொழில்நுட்பம், அதே நபர் ஆங்கிலம் பேசினால் அவன் அமெரிக்கர் என்றும் கணிப்பதாகவும் இந்த குறைபாட்டை நீக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது