குறைந்த அளவில் பேருந்து இயக்கம்: சென்னையில் பயணிகள் கடும் அவதி
சென்னையில் மிகக்குறைந்த அளவே மாநகர பேருந்துகள் இயங்குவதால் பொதுமக்களும் பயணிகளும் கடும் அவதியில் உள்ளனர்
ஜூன் மாத சம்பளம் கிடைக்காததால் ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் செய்து வரும் நிலையில் சென்னையில் சுமார் 3500 பேருந்துகள் இயங்கவில்லை.
இதனால் சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்கள் கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.
வாரத்தின் முதல் நாள் என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் கடும் அவதியடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் ஒருசிலருக்கு கைகொடுத்தாலும் மெட்ரோ இல்லாத வழித்தடங்களில் பொதுமக்களின் கதி அதோகதியாகத்தான் உள்ளது.