குல்தீப், புவனேஷ்குமார் அபார பந்துவீச்சு: இந்தியாவுக்கு 2வது வெற்றி

குல்தீப், புவனேஷ்குமார் அபார பந்துவீச்சு: இந்தியாவுக்கு 2வது வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்று முன்னிலையில் உள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராத் கோஹ்லியின் 92 ரன்களுடன் 252 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 253 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் குல்தீப்பின் ஹாட்ரிக், புவனேஷ்குமாரின் நேர்த்தியான பந்துவீச்சால் தலா மூன்று விக்கெட்டை வீழஸ்திரேலியாவை திணறடித்தனர். ஸ்னோனிஸ் கடைசி வரை களத்தில் நின்று 62 ரன்கள் எடுத்த போதிலும் அவரால் அணியை வெற்றி இலக்கிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஆஸ்திரேலிய அணி 42.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

92 ரன்கள் எடுத்த விராத்கோஹ்லி ஆட்டநாயகன் விருதினை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநால் போட்டி வரும் ஞாயிறு அன்று இந்தூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply