குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 2 கப்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய காலிபிளவர் – 100 கிராம்
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 100 கிராம்
பெங்களூரு தக்காளி – ஒன்று
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காலிபிளவரை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் நன்கு வேகவைத்து இறக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு… தயார் செய்து வைத்த காலிபிளவர் மசாலாவை அதில் வைத்து பரவலாகத் தேய்த்து தோசையை மூடி வேகவிட்டு எடுக்கவும்.

* சூடான காலிபிளவர் மசாலா தோசை ரெடி!

Leave a Reply