குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.
முதலில் எதையாவது சமைத்துவிட்டு “இதை சாப்பிடப் போறியா இல்லையா?” என்று குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.
இந்த வம்பே வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க “குழந்தைகளிடையே உருவாகும் போட்டி”யை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனைத்தொடர்ந்து பின்பற்றி வந்தால் விரைவில் நீங்களே மாற்றத்தைப் காணலாம்.
மேலும் குழந்தைகள் விரும்பும் வகையில் உணவுகளை தயாரித்து கொடுங்கள். ஆதாவது குழந்தைகள் சாப்பிடும் உணவுகள் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சத்தான காய்கறிகளை அவர்கள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு காய்கறிகளை வித்தியாசமான முறையில் அவர்கள் விரும்பும் வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.