உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும். தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்தப்பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அவை:
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதய செந்தூரம் 100 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. என்ற அளவில் எடுத்து தினமும் காலை-இரவு, பாலில் கலந்து உணவுக்குப் பின்பு சாப்பிடலாம்.
2) பூனைக்காலி விதைப் பொடி 1 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, இரவு குடிக்கலாம்.
3) நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப்பொடி சம அளவில் பொடித்து பாலில் கலந்து சாப்பிடலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அசைவ உணவுகள்: நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்,
பருப்பு வகைகள்:
பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், பழங்கள்: செவ்வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்,
கீரைகள்:
பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு மற்றும் சின்ன வெங்காயம், பூண்டு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் கூடாது.
https://www.maalaimalar.com/health/women/siddha-medicine-for-infertility-547552
https://www.maalaimalar.com/health/women/siddha-medicine-for-infertility-547552
https://www.maalaimalar.com/health/women/siddha-medicine-for-infertility-547552
https://www.maalaimalar.com/health/women/siddha-medicine-for-infertility-547552