தனக்கு குழந்தை கொடுக்க உதவி செய்யும் ஆணுக்கு சிறப்பு பரிசு தரவுள்ளதாக 25 வயது இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு ருமேனியா நாட்டை சேர்ந்த அடிலினா அல்பு என்ற 25 வயது இளம்பெண், ‘ஆண்கள் எல்லோரும் முதிர்ச்சியற்று இருப்பதால் அவர்களுடன் தொடர்ந்து வாழ தனக்கு விருப்பம் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் தனக்கு குழந்தை தேவை என்பதால் தனக்கு குழந்தை கொடுக்க விரும்பும் ஆண்கள் தன்னை அணுகலாம் என்றும் தகுதியுள்ள ஒருவருக்கு 350 பவுண்ட் பரிசு தரவுள்ளதாகவும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
உங்களுக்கு சுகம், எனக்கு குழந்தை என்ற அளவில் மட்டுமே இந்த உறவு இருக்கும் என்றும் பிறக்கப்போகும் குழந்தை தனக்கு மட்டுமே முழு உரிமை உடையது என்றும் கூறியுள்ள அடிலினா, தகுதியுள்ள பெண்கள் மருத்துவரிடம் சான்று பெற்று தன்னை தொடர்பு கொள்ளவும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடிலினாவின் விளம்பரத்தை பார்த்து அவருக்கு பலர் பதில் அனுப்பியுள்ள நிலையில் ஒருசிலர் அவருடைய் விளம்பர்த்திற்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.