கு.க.செல்வம் மீது அதிரடி நடவடிக்கை

 திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து எம்.எல்.ஏ., கு.க.செல்வம் விடுவிப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்படுவதாகவும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கு.க.செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கு.க.செல்வம் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்தே திமுக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply