கூகுள் பிளஸ் சேவை திடீர் நிறுத்தம்: பயனாளிகள் அதிர்ச்சி
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு போட்டியாக கடந்த 2011ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் சேவை திடீரென நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ், பாதுகாப்பு காரணங்களால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வலைப்பக்கத்தில் கணக்கு வைத்துள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு மீறல்கள் காரணமாக கூகுள் பிளஸ் தளம் மூடப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
கூகுள் பிளஸ் சேவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அதற்குள் பயனாளிகள் தங்கள் டேட்டாக்களை சேகரித்து கொள்ளலாம் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.