கூகுள் மேப்ஸ்-இன் ஷார்ட்கட் சிறப்பு அம்சங்கள் என்ன?

கூகுள் மேப்ஸ்-இன் ஷார்ட்கட் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் மேப்ஸ் செயலியில் ஷார்ட்கட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. ஷார்ட்கட்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் 14 க்விக் ஆக்ஷன்கள் – நியர்பை ஃபுட், மால்ஸ், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் வழிகள் உள்ளிட்டவற்றில் இருந்து தேர்வு செய்ய முடியும்.

புதிய அம்சம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 9.72.2-இல் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் மேப்ஸ் செயலியில் இடம்பெற்றிருக்கும் சிறிய கார்டு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மூன்று ஷார்ட்கட் ஆப்ஷன்களை வழங்குகிறது.

இதில் வழங்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களை எடிட் செய்யும் வசதியும் வழங்கப்ட்டிருக்கிறது. இதனால் பயனர் விரும்பும் அல்லது அதிகம் பயன்படுத்தும் ஆப்ஷன்களை சேர்த்து கொள்ளலாம். ஆப்ஷன்களில் அருகாமையில் உள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதே அம்சம் பயனர் விரும்பும் இடங்களை தேர்வு செய்து கொள்ளும் படி வழங்கப்பட்டு வந்தது. எனினும் புதிய அம்சம் பயனர்களை ஒரே சமயத்தில் நான்கு இடங்களுக்கான ஷார்ட்கட்களை பதிவு செய்ய வழி செய்கிறது. புதிய ஷார்ட்கட் அம்சம் கடந்த ஆண்டு கூகுள் வழங்கிய க்விக் ஆக்ஷன்ஸ் அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக பார்க்கப்படுகிறது.

புதிய ஷார்ட்கட் அம்சம் இதுவரை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. சர்வெர் சார்ந்த அப்டேட்கள் என்பதால் படிப்படியாக மற்ற பயனர்களுக்கு வழங்கப்படலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம், ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்தியாவில் கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவது குறித்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டது.

புதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply