இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Scientific Assistant (Health Physics)
காலியிடங்கள்: 04 (PWD-HH).
பயிற்சி கால அளவு: 18 மாதங்கள்
சம்பளம்: பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9,300. பயிற்சி முடித்தபின் மாதம் ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 19.01.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை முக்கிய பாடமாக படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Grade I (Finance & Accounts)
காலியிடங்கள்: 03 (VH-2, HH-1).
பணி: Assistant Grade I (Human Resources)
காலியிடங்கள்: 02 (HH)
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயதுவரம்பு: 19.01.2016 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance & Accounts, Commerce பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆங்கிலத்தில் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துதேர்வு, கணினி தட்டச்சு திறன் தேர்வு, கணினி செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Manager (HRM),
Recruitment Section,
Kudankulam Post,
Radhapuram Taluk,
Tiurnelveli District, Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.