கூட்டணிக்கு பின் டாக்டர் ராமதாஸின் பொன்மொழிகள்!

கூட்டணிக்கு பின் டாக்டர் ராமதாஸின் பொன்மொழிகள்!

அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த கட்சிகளில் ஒன்றாகிய பாமக, நேற்று அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்ட நிலையில் பாமகவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நெட்டிசன்களுக்கு பதிலடி தரும் வகையில் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் அறிஞர்களின் பொன்மொழிகளை பதிவு செய்து வருகிறார். அவற்றில் சில இதோ:

ஓர் உண்மையான தலைவர் என்பவர் கருத்தொற்றுமையை தேடிக்கொண்டிருக்க மாட்டார். மாறாக கருத்தொற்றுமையை வார்த்தெடுப்பவராக இருப்பார்! – மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்.

ஒன்று சேர்வது தான் தொடக்கம்; ஒன்றாகவே இருப்பது முன்னேற்றம்; ஒன்றாக உழைப்பது தான் வெற்றி! – எட்வர்ட் எவரெட் ஹால்

திறமையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எதன் மீதும் பொறாமை ஏற்படாது. பொதுவாகவே பொறாமை என்பது நாடி நரம்பெல்லாம் பாதுகாப்பின்மை ஊறிப்போனதன் அறிகுறி தான்! – ராபர்ட் ஏ.ஹெய்ன்லெய்ன்

பொறாமை என்பது ஏவப்படுபவர்களுக்கு சில தொந்தரவுகளை உண்டாக்கும்; அதே நேரத்தில் பொறாமைப்படுபவர்களை அது வதம் செய்து விடும்! – வில்லியம் பென்

பொறாமை என்பது ஒரு மனப் புற்றுநோய்! – பி.சி. போர்ப்ஸ்

பொறாமை என்பது ஒன்றுக்கும் உதவாதவர்களால் அறிவாற்றல் கொண்ட மேதைக்கு செலுத்தப்படும் மரியாதை ஆகும்! – ஃபுல்டன் ஜே. ஷீன்

Leave a Reply