கூவத்தூர் ரிசார்ட் மூடப்பட்டது.
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட் இன்று திடீரென மூடப்பட்டது.
இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் வெளியேறியதை அடுத்து பாரமரிப்பு பணிகள் என்ற காரணத்தை காட்டி விடுதியை மூடியது நிர்வாகம்.
இதனால் இன்று வாக்கெடுப்பு ஒருவேளை நடக்காவிட்டால் அதிமுக எம்.எல்.ஏக்களை அதன் தலைமை எங்கு தங்க வைக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.