கெவின்கேரிலிருந்து வெளியேறியது சைரஸ் கேபிடல்

கெவின்கேரிலிருந்து வெளியேறியது சைரஸ் கேபிடல்

நுகர்பொருள் துறையின் முன் னணி நிறுவனமான கெவின் கேர் நிறுவனத்திலிருந்து பிரை வேட் ஈக்விட்டி நிறுவன மான சைரஸ் கேபிடல் வெளியேறியுள்ளது. கெவின் கேர் நிறுவனத் தில், சைரஸ் கேபிடல் ரூ.250 கோடி முதலீடு செய்திருந்தது. நான்கு ஆண்டுகளில் வெளி யேறும் வகையில் இந்த முதலீட்டை மேற்கொண்டிருந்தது.

இது தொடர்பாக கெவின்கேர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன், சைரஸ்கேபிடல் வைத்திருந்த பங்குகளை அனைத்தையும் வாங்கியுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 100 சதவீத பங்குகளும் சி.கே.ரங்கநாதன் வசம் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

கெவின்கேர் நிறுவனத்தில் 2013ம் ஆண்டில் ரூ.250 கோடியை சைரஸ் கேபிடல் முதலீடு செய்திருந்தது. நான்கு ஆண்டு களுக்குள் வெளியேறுவது என்கிற அடிப்படையில், குறுகிய காலத்தில் இரண்டுமுறை இந்த முதலீட்டை மேற்கொண்டிருந்தது.

‘‘சைரஸ் கேபிடல் முதலீடு, மாற்றம் தேவைப்பட்ட நேரத்தில் பக்கபலமாக இருந்தது, மிகப் சிறப்பாக செயல்பட்டது’’ என்று சி.கே.ரங்கநாதன் கூறியுள்ளார்.

கெவின்கேர் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாகவே 15 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. தற்போது பால், உணவு மற்றும் குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Leave a Reply