கேக் சாப்பிட்ட 60 வயது முதியவருக்கு ஏற்பட்ட துயரம்
60 வயது முதியவர் ஒருவர் ஆசையாக சாப்பிட்ட கேக், அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் என்ற பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு முன்னணி நிறுவனத்தின் கேக்கை சாப்பிட்டுள்ளார். அப்போது அந்தக் கேக்கில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பொருளை அவர் தன்னையும் அறியாமல் அவர் விழுங்கியுள்ளார்
அந்தப் பொருள் அவரது தொண்டையில் உள்ள உணவு குழாயில் சிக்கிக் கொண்டது. இதனால் அவருக்கு சில நாட்களில் காய்ச்சல் மற்றும் தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவரிடம் சென்று பார்த்த போது மருத்துவர்கள் அவரது தொண்டையை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அவரது தொண்டையில் ஒரு பிளாஸ்டிக் பொருள் சிக்கியதை கண்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றினர்
ஒரு வாரத்திற்கு முன்பு அவர் சாப்பிட்ட கேக்கில் தான் இந்த பிளாஸ்டிக் பொருள் இருந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் இதனை கவனிக்காமல் இருந்தால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தக்க சமயத்தில் கவனிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 60 வயது முதியவர் உயிர் தப்பியதோடு ஒரு சில நாட்களில் அவர் முழு குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது