கேரளாவில் கொரோனா பாதிப்பு: தலைமை செயலகத்தில் அவசர கூட்டம்
கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்து கலந்தாலோசிக்க சுகாதாரத் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அழைப்பு விடுத்துள்ளார். திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர ஒருவருக்கு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கண்டுபிடித்ததை அடுத்தே இந்த அவசர கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்