கேரளாவுக்கு ஒரு நீதி? தமிழகத்திற்கு ஒரு நீதியா? கமலுக்கு நெட்டிசன்கள் கேள்வி
கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் அம்மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கேரள வெள்ள நிவாரண நிதியாக தமிழகம், புதுச்சேரி அரசுகள் மட்டுமின்றி திரையுலகினர்களும், பிரமுகர்களும் நிதியளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சமும், கமல்ஹாசன் ரூ.25 லட்சமும், நடிகர் சங்கம் ரூ.5 லட்சமும் கேரளாவின் முதல்வர் நிவாரண நிதியாக அளித்துள்ளது. மேலும் கமல்ஹாசன், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழர்கள் உதவிகரம் நீட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் சென்னையில் வெள்ளம் வந்தபோது இதே கமல்ஹாசன், ‘தான் வருமான வரி கட்டுவதாகவும், அந்த பணத்தில் வெள்ள நிவரணம் செய்வதை விட்டுவிட்டு எதற்காக நிதி கேட்கின்றார்கள்’ என்றும் கூறியதாக நெட்டிசன்கள் சமுக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு கமல் என்ன பதிலளிக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்