கேரளாவை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும்: ராகுல்காந்தி

கேரளாவை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும்: ராகுல்காந்தி

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து கட்டிய மழையால் அம்மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. இந்த நிலையில் இன்று கேரள வெள்ள நிலைமையை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி இடைக்கால நிவாரணமாக கேரளாவுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கேரளாவில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிதும் தாமதமின்றி தேசிய பேரிடராக கேரளாவை அறிவிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply