கேரளா நிவாரன நிதி: இந்திய அரசை விட அதிக உதவி செய்த ஐக்கிய அரபு அமீரக அரசு
கேரளாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் அம்மாநிலத்தில் மிகப்பெரிய தேசிய பேரிடர் ஏற்பட்டிருக்கும் நிலையில் உலகெங்கிலும் இருந்து அம்மாநிலத்திற்கு நிதியுதவி குவிந்து வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவின் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி தருவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசை விட இந்திய. அரசு ரூ.200 கோடி குறைவாக நிதியுதவி செய்துள்ளது நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.