கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடி அறிவித்த பிரதமர் மோடி

கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடி அறிவித்த பிரதமர் மோடி

கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் சேதம் அடைந்துள்ளது. இந்த சேதத்தை மீட்டெட்டுத்து கேரளா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப ஒருசில வாரங்களாவது ஆகும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கேரள வெள்ள நிலையை நேரில் சென்று பார்த்த பிரதமர் மோடி அதன் பின்னர் கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர்களுடன் ஆலோசனை செய்தார்.

பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு முதல்கட்டமாக ரூ.500 கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு கேரள அரசுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply