கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.35 கோடி: கொடுத்தவர் யார் தெரியுமா?
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வந்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கோடிக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலம் மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசும், தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசும், தனியார் அமைப்புகளும் திரையுலக பிரமுகர்களும் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு, கத்தார் நாட்டு இளவரசர் 5 மில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.35 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.