கேள்வி கேட்ட அதிகாரிக்கு கட்டாய விடுப்பா? அமைச்சர் நிர்மலா சீதாரமன் விளக்கம்
ரபேல் ஊழல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து ஆட்சேபனைக்குரிய கேள்வி கேட்ட அதிகாரி ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக வெளியான செய்திக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியாதாவது: பேச்சுவார்த்தை நடத்தும்போது, அதில் ஈடுபடும் அதிகாரிகளிடையே கருத்து மாறுபாடுகள் எழுவது இயற்கைதான். சம்பந்தப்பட்ட அதிகாரியின் மாறுபட்ட கருத்து, பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்பிறகு, கூட்டு முடிவு எடுக்கப்பட்டது. மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இறுதி குறிப்பில் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டுள்ளார். அதை ஏற்றுத்தான், மந்திரிசபை கூட்டத்தில், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், அதிருப்தி தெரிவித்த அதிகாரி ராஜீவ் வர்மா, விடுமுறையில் அனுப்பப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. அது தவறான தகவல். அவர் முன்கூட்டியே திட்டமிட்டபடி, வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக சென்றார்.