கே.எல்.ராகுலுக்கு அணியில் நிரந்தர இடம்: ரிஷப் பண்ட் நிலை அம்போதானா?

கே.எல்.ராகுலுக்கு அணியில் நிரந்தர இடம்: ரிஷப் பண்ட் நிலை அம்போதானா?

தல தோனிக்கு பின்னர் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தொடர்வார் என்று கருதப்பட்டது. அதேபோல் அவர் ஒரு சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தினார்

தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் என அணி நிர்வாகம் முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில போட்டிகளில் ரிஷப் பண்ட் சொதப்ப தொடங்கினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ரிஷபன் கீப்பிங்கில் சொதப்பிய தோடு பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை.

இதனை அடுத்து திடீரென கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்டார். அவர் தற்போது கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சூப்பராக செய்து வருவதால் அவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைத்து விட்டதாகவே கருதப்படுகிறது. இதனை அடுத்து ரிஷப் பண்ட் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது

இந்திய அணி மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் கண்டிப்பாக தேவை என்றும் அதனால் ரிஷப் பண்ட்டையும் அவ்வப்போது பயன்படுத்தி அவரையும் தயார் செய்து கொள்ள வேண்டுமென்றும் சீனியர் வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த கருத்தை விராட் கோஹ்லி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply