கே.பாக்யராஜ் திடீர் ராஜினாமா: பின்னணி என்ன?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு , ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், விஜய் நடிப்பு என மூன்று பெரிய தலைகள் இணைந்த படத்தின் கதை விவகாரம் எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜிடம் வந்த போது, அவர் தனது மனசாட்சிப்படி ‘சர்கார்’ படகுழுவிற்கு ஒரு எதிரான தீர்ப்பை அளித்தார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது
ஆனால் இன்று திடீரென தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். இது பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. நிச்சயம் இந்த ராஜினாமாவிற்குப்பின் ஏதோ ஒரு அழுத்தம் இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
இது தான் நேர்மையானவர்களுக்கு கிடைக்கும் பரிசு என்றும், இதற்கான விலையை, இந்த பாவத்துக்கான அறுவடையை அதிகார மையத்தில் இருப்பவர் அனுபவித்தே”தீருவர் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்