கொதிக்கும் சாப்பாட்டில் விழுந்த 3 வயது குழந்தை: ஹெட்போனில் பாட்டு கேட்ட சமையல்காரர்
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மிர்சாபூர் என்ற பகுதியில் பள்ளியில் சமையல் செய்து கொண்டிருந்த போது கொதிக்கும் சமையல் பாத்திரத்தில் மூன்று வயது குழந்தை தவறி விழுந்ததை கவனிக்காமல் அந்த சமையலை செய்து கொண்டிருந்த சமையல்காரர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் என்ற பகுதியில் உள்ள ராம்பூர் என்ற கிராமத்தில் ஒரு பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்காக மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக சாப்பாடு கொண்டு கொண்டிருக்கும் பாத்திரத்தில் தவறி விழுந்தார். இதனை அடுத்து அவர் அலறி உள்ளார்
ஆனால் அருகேயுள்ள சமையல்காரர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே இருந்ததால் சிறுமியின் அலறல் சத்தம் அவருக்கு கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து படுகாயமடைந்த 3 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தபோது ’சமையல்காரர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டு கவனக்குறைவாக வேலை பார்த்ததால் தான் தன்னுடைய மகள் இறந்தார்’ என்று கூறியுள்ளார் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்