கொரோனாவால் பாதித்த தேசிய கொடி வியாபாரம்:

 உற்பத்தியாளர்கள் கவலை!

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு துறைகள் அடிமட்ட அளவில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தேசிய கொடியை தயாரிக்கும் மற்றும் உற்பத்தி செய்யும் தொழிலும் அடி வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது

வரும் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடிகள் அன்றைய தினத்தில் நல்ல விற்பனையாகும். இதனால் ஆயிரக்கணக்கான தேசியக் கொடிகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பார்கள்

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேசிய கொடி ஆர்டர்கள் சுத்தமாக வரவில்லை என்று மிகக் குறைந்த ஆர்டர்களே வந்திருப்பதாகவும் இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் என்றும் தேசிய கொடியை உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்யும் கோயம்புத்தூர் கோவையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பேட்டி அளித்துள்ளார்

கொரோனா வைரஸ் தேசியக்கொடி வியாபாரத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரியவருகிறது

Leave a Reply