தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சராக பதவியேற்ற தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தற்போது அதிலிருந்து குணமாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
மே 12-ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தற்போது பூரண குணம் அடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது