9 வயது சிறுவன் சாதனை
கொரோனா நோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் உள்ளனர்
இந்த நிலையில் கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் கொரோபோய் என்ற ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி உள்ளார்
இந்த ஆண்ட்ராய்டு கேம் பொழுதுபோக்காக விளையாடுவது மட்டுமன்றி ஆங்காங்கே கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது இந்த கேமை உருவாக்க தனது மாமா தனக்கு உதவியாக இருந்தார் என்றும் அவருடைய ஊக்கத்தினால் ஒரே வாரத்தில் இந்த கேமை உருவாக்கி விட்டதாகவும் பேட்டி ஒன்றில் அந்த மாணவர் கூறியுள்ளார்
தற்போது இந்த கேம் குறித்த விபரங்கள் யூடியூப்பில் இருப்பதாகவும், இந்த ஆண்ட்ராய்டு கேம், பிளே ஸ்டோரில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது