மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை செய்தார்
மாவட்டம் மற்றும் நகர அளவில் படுக்கைகள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த அவசர ஆலோசனையை அடுத்து பிரதமர் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது