கொள்ளையர்களை தடுக்க முயன்ற பூசாரி கொலை: தேனி அருகே பதட்டம்
தேனி மாவட்டம் சுருளியில் உள்ள பூத நாராயணன் கோயிலில் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சி செய்தது. இதனை அந்த கோவிலின் பூசாரி பார்த்து உடனே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க வந்த கும்பலை தடுக்க முயன்றார். இதில் பூசாரி மல்லையன் கொள்ளையர்களா வெட்டிக் கொல்லபட்டார்
இந்த நிலையில் பூசாரியை கொன்றவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.