கோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மற்றும் அவருடன் படிக்கும் கல்லூரி மாணவி ஸ்வாதி ஆகியோர் நெருங்கி பழகி வந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், கோகுல்ராஜை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் மறுநாள் கோகுல்ராஜ் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக இருந்தாஅர்
இதுகுறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான ஸ்வாதியை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்வாதி உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்துள்ளது.