கோட் சூட் ஏன்? முதல்வர் ஈபிஎஸ் விளக்கம்
சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்த முதல்வர் கோட், சூட் காஸ்ட்யூமில் அசத்தினார். ஒருசிலர் கேலி செய்தாலும் அவரது உடையை பெரும்பாலானோர் பாராட்டினர்
இந்த நிலையில் ‘தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லும்போது அவர்களது உடையான கோட், சூட்டில் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்றும், வெளிநாட்டு தொழிலதிபர்களை சந்திக்கும்போது அவர்கள் உடையில் இருந்தால்தானே ஒரு மரியாதை இருக்கும் என்றும் கூறினார். முதல்வரின் இந்த விளக்கம் ஏற்கும் வகையில் இருந்ததாக பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வெளிநாட்டு தட்பவெப்ப நிலைக்கு கோட், சூட் அணிவதே பொருத்தமானது என்றும் கருதப்படுகிறது